கனமழையால் வெள்ளத்தில் மிதந்த வீடுகள்.. புகார் அளித்தும் யாரும் வராததால் தூய்மை பணியாளராக மாறிய மக்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
18 May 2024, 10:59 am

கனமழையால் வெள்ளத்தில் மிதந்த வீடுகள்.. புகார் அளித்தும் யாரும் வராததால் தூய்மை பணியாளராக மாறிய மக்கள்!

கோவை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் முக்கிய நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்துவங்கி உள்ளது.

இந்த நிலையில் தொண்டாமுத்தூர், ஆலந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் இரவு தொடர் கன மழை கொட்டி தீர்த்தது.

இதனால் ஆலந்துறை அடுத்த செம்மேடு கிராமத்தில் உள்ள திரு.வி.க நகர் குடியிருப்புக்குள் மழை நீர் சூழ்ந்தது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் சுமார் ஐந்து அடி உயரத்திற்கு நீர் தேங்கியது.

இதன் காரணமாக வீடுகளுக்குள் இருந்த பொதுமக்கள் வெளியே வர முடியாமலும், வெளியே சென்றவர்கள் குடியிருப்புக்குள் வர முடியாமலும் தவித்தனர்.

மேலும் படிக்க: ஊட்டி போற பிளான் இருக்கா? அப்போ ரயில் பயணத்தை மறந்திருங்க : சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு!

இந்நிலையில் ஒரு சில வீடுகளில் மழை புகுந்தது. மேலும் அதிகாலையில் இருந்து அப்பகுதியில் மக்களே தூய்மை செய்து வருகின்றனர்.

அதிகாரிகள் ஆலாந்துறை பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!