திமுக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் எப்படி? நடிகை கௌதமி ரியாக்சன்!

Author: Udayachandran RadhaKrishnan
20 March 2023, 6:16 pm

கோவை குனியமுத்தூர் பகுதியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் நடிகை கௌதமி பங்கேற்று இளைஞர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஜி 20 மாநாடு நமது இந்தியாவில் நடப்பது நமது தேசத்திற்கே ஒரு கெளரவம் அங்கீகாரம் எனவும் இந்த கௌரவமும் அங்கீகாரமும் தற்போது கோவைக்கு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

நம் தேசத்தின் இளைஞர்களுடைய எதிர்காலம் தேசத்திற்கு மட்டுமல்லாமல் உலக வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியமானது தேவையானது என எடுத்துக்காட்டி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக ஆளுநர் பேசியுள்ளார்கள் என்றார்.

ஜி 20 யில் இனி அடுத்தடுத்து வரக்கூடிய நிகழ்ச்சிகள் இன்னும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இருக்கும், அனைவருக்கும் தேவையான நிகழ்வாகவும் அமையும் என தெரிவித்தார்.

ஜி 20 யில் இருந்து நம்மால் என்ன எடுத்துக் கொள்ள இயலும் என்பதை நாம் பார்க்க வேண்டும் என தெரிவித்த அவர் சுயநலம் என்பது நமது நல்லதிற்காக, நாம் தலை நிமிர்ந்து இன்னும் கௌரவமாக பெருமையாக வாழ்வதற்கு என்ன சாதிக்கலாம் என்பதை இதிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

ஜிஸ்டி என்பது உலக அளவில் எடுத்துக்காட்டாக உள்ளது என தெரிவித்த அவர் இதில் மீண்டும் அரசியல் பேச்சை கொண்டு வரக்கூடாது, அதுதான் தேசத்திற்கு மிகவும் நல்லது என தெரிவித்தார்.

மேலும் தற்போது நடைபெறும் இந்த மாநாட்டில், இளைஞர்கள் என்பவர்மெண்ட் குறித்து பேச உள்ளதாக தெரிவித்தார். பல்வேறு இடங்களில் இது குறித்து பேசினாலும் உங்களால் முடியும் என்று மட்டும் தான் கூறுகிறார்களே தவிர நமக்குள் என்னென்ன தேவைகள் வேண்டும் என்ற விழிப்புணர்வை எடுத்துச் சொல்வது பெரும்பாலும் தென்படுவதில்லை என தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரப்படும் என தற்போது தெரிவித்துள்ளது குறித்து கேள்வி பதில் அளித்த அவர், மக்களுக்கு யார் நன்மை செய்தாலும் அதை நான் வரவேற்பேன் எனவும், அரசாங்கமாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் அதுதான் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.

கேஸ் விலை உயர்வு குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர் இது ஒரு வார்த்தையில் கூறுகின்ற பதில் அல்ல எனவும் உலக அளவில் நடைபெறுகின்ற, பல்வேறு விஷயங்கள் சேர்ந்து தான் இது போன்ற மாற்றங்கள் வருகிறது என்றார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!