மின்கம்பி அறுந்து விழுந்து தந்தை, மகன் பலி… மகாபலிபுரத்தில் நடந்த சோகம்.. மின்வாரியத்தை கண்டித்து உறவினர்கள் போராட்டம்..!!

Author: Babu Lakshmanan
20 March 2023, 7:19 pm
Quick Share

மின்கம்பி அறுந்து விழுந்து தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மின்வாரியத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

வடகடும்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டன். இவருக்கு 10 வயதில் ஹேமநாதன் எனும் மகன் இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதனை கவனிக்காமல் சென்ற இருவர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் கேட்டு அங்கு திரண்ட உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த மாவட்ட ஆட்சியர், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என உறுதியளித்தார். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனிடையே, கடந்த ஓராண்டாக அந்த மின்கம்பி பழுதாகி தாழ்வாக சென்று கொண்டிருந்ததாகவும், பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்காததே இரு உயிர்கள் பறிபோனதுக்கு காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Views: - 236

0

0