பொதுக்கழிப்பிடத்தில் கிடந்த மனித எலும்புக்கூடு : கிராம மக்கள் அதிர்ச்சி.. போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2021, 5:39 pm
Skeleton in toilet -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : திருவட்டார் அருகே பயன்படுத்தபடாத பொதுகழிப்பிடத்தில் சுமார் 60வயதுடைய ஆண் எலும்புகூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே கண்ணங்கரை பகுதியில் ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட மகளிர் சுகாதார கழிப்பிட கட்டிடம் அமைந்துள்ளது. கால்வாய் கரையில் அமைந்துள்ள இந்த கட்டிடம் புதர்மண்டி பொதுமக்கள் பயன்பாடின்றி காணபட்டது.

இந்நிலையில் இன்று அந்த கட்டிடத்திற்குள் எலுப்புகூடு ஒன்று இருப்பதாக அப்பகுதியினர் திருவட்டார் காவல்துறையினருக்கு தகவலளித்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் காவல்துறையினர் அந்த கழிப்பறை கட்டிடத்தின் கதவை உடைத்து அந்த எலும்புகூடை மீட்டு விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் சுமார் 60 வயதிற்குட்பட்ட ஆண் ஒருவரின் எலும்புகூட என தெரியவந்தது. அதைதொடர்ந்து அந்த எலும்புகூடை கைபற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்து வழக்குபதிவு செய்த திருவட்டார் காவல்துறையினர் கொலை செய்யபட்டு உடல் கொண்டுவந்து மறைத்து வைக்கபட்டதா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் அப்பகுதியில் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களை சேகரித்தும் விசாரணை மேற்கொண்டனர்.

Views: - 538

0

0