ஒரே சேலையில் தூக்குப்போட்ட கணவன் மனைவி : மகன், மகளை தவிக்கவிட்டு தம்பதி எடுத்த விபரீத முடிவு!!
Author: Udayachandran RadhaKrishnan24 August 2021, 1:30 pm
கோவை : கடன் பிரச்சனை காரணமாக ஒரே சேலையில் தூக்குப்போட்டு கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் முகமது அனீஸ் (வயது 44). மின்வாரிய காண்டிராக்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மும்தாஜ் (வயது 35). இவர்களுக்கு 12ம் வகுப்பு படிக்கும் மகனும்,9 வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் மகன் மற்றும் மக்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டில் முகமது அனீஸ் மற்றும் அவரது மனைவியும் மட்டும் இருந்துள்ளனர்.
இதனிடையே முகமது அனீஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாடியில் இருந்து கீழே விழுந்ததில் அவருக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் கடன் பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் பால் வாங்கிவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.
அதன்பின்னர் நீண்ட நேரமாகியும் கணவன் மனைவியும் வெளியே வரவில்லை.
சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது இருவரும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் பிரச்சனையால் கோவையில் கணவன் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0
0