மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்: வேறு பெண்ணுடன் பேசுவதை கண்டித்ததால் நேர்ந்த விபரீதம்..!!

Author: Aarthi Sivakumar
16 September 2021, 12:37 pm
Quick Share

கோவை: கோவையில் வேறு ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பதை கண்டித்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி செல்வி (45). இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனந்தகுமார் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மாலை குடிபோதையில் தனது மனைவியிடம் வாய் தகராறு செய்துள்ளார்.

அப்பொழுது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதை அறிந்த மனைவி இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தகுமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தில் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதுதொடர்பாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு புகார் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய ஆனந்த குமாரை தேடி வந்தனர்.

தப்பியோடிய ஆனந்தகுமாரை இன்று காலை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Views: - 252

0

0