ஊராட்சி மன்றத் தலைவருடன் கள்ளத்தொடர்பு? மனைவி மீது பெட்ரோல் ஊற்றிய கணவன்!

Author: Hariharasudhan
28 December 2024, 6:52 pm

காஞ்சிபுரம் அருகே, ஊராட்சி மன்றத் தலைவருடன் தொடர்பில் இருந்ததாக மனைவி மீது பெட்ரோல் ஊற்றி, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே உள்ள ஆதனூர் கிராமத்தின் ஜெயலட்சுமி நகரில் வசித்து வருபவர் செந்தில்குமார் (44) – கலையரசி (38) தம்பதி. இதில் செந்தில்குமார் டெய்லராகவும், மனைவி கலையரசி செங்கல்பட்டு அருகே வீராபுரம் கிராமத்தில் அங்கன்வாடி ஊழியராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், வழக்கம்போல் நான்கு பேரும் நேற்று இரவு உறங்கச் சென்றனர். இதனையடுத்து, அதிகாலை நேரத்தில் தம்பதி இருந்த அறையில் தீப்பிடித்து எரிந்து உள்ளது. தொடர்ந்து கேட்ட அலறல் சத்தத்தால் விழித்த மகள்கள், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அழுதுகொண்டே அழைத்துள்ளனர்.

பின்னர் வந்த அக்கம் பக்கத்தினர், ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்துள்ளனர். இதன் பேரில், தீக்காயங்களுடன் கிடந்த இருவரும் மீட்கப்பட்டு, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, சிகிச்சையில் இருந்த இருவரிடமும் மணிமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

Extra Marital affair issue in Kanchipuram

இந்த விசாரணையில், மனைவி கலையரசிக்கும், வீராபுரம் ஊராட்சி மன்றத் தலைவருக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாகவும், குறிப்பாக, கடந்த டிசம்பர் 24ஆம் தேதி, அங்கன்வாடி மையத்தில் இருந்து அழைத்து வரச் சென்ற போது கலையரசியும், ஊராட்சி மன்றத் தலைவரும் பேசிக் கொண்டிருந்ததாகவும் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: CM ஸ்டாலின் போஸ்டர் மீது செருப்பு வீசிய மூதாட்டியை படம்பிடித்த இளைஞர் கைது.. டிடிவி கண்டனம்!

பின்னர், தனது மனைவியின் செல்போனில் வாட்ஸ் அப் செயலியைச் சோதனை செய்து பார்த்ததில், அவர்கள் அடிக்கடி பேசி வருவதையும் கண்டறிந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், நேற்று இரவு கூடுவாஞ்சேரியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார்.

இதனையடுத்து, இன்று (டிச.28) அதிகாலை சுமார் 02.50 மணியளவில், தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி மீதும், தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!