எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்ல : மணப்பெண் வெளியிட்ட வீடியோ.. மண்டபத்தில் குவிந்த போலீசார்!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2021, 9:43 am
Marriage Stop - Updatenews360
Quick Share

சென்னை : புழல் அருகே திருமணம் நடக்க இருந்த கடைசி நேரத்தில் கட்டாய திருமணத்தை தடுக்ககோரி வாட்ஸ் அப் வீடியோ அணுப்பிய மணப்பெண்ணின் புகாரால்
போலீசார் திருமணத்தை தடுத்து பெண்ணை மீட்டனர்.

சென்னை புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்ப சாமி நகரைச் சேர்ந்தவர்
தமிழ் முன் அன்சாரி. இவரது மகள் ஜன்னதுல் பிர்தௌஸ். இவருக்கு அவரது பெற்றோர்கள் அவரது முறை மாமனை திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்து அதற்குண்டான பணிகளில் ஈடுபட்டு திருமண வேலைகள் நடந்து வந்தது.

இந்நிலையில் மணப்பெண் அவரது செல்போனில் இருந்து வாட்ஸ் அப் மூலம் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை எனவும் எனக்கு திருமணம் செய்து வைக்க உள்ள எனது மாமன் பல்வேறு பெண்களுடன் தொடர்பில் உள்ளவர் என்றும் எனவே இந்த திருமணத்தை எனது உறவினர்களும் பெற்றோர்களும் கட்டாயப்படுத்தி எனது விருப்பம் இல்லாமல் நடத்தி வைக்க முயற்சிப்பதாக கூறியும் மேலும் இந்த திருமணம் நடைபெற்றால் அதன் பிறகு தான் உயிருடன் இருக்கப் போவதில்லை எனவும் உருக்கமாக வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோவானத வைரலாக பரவி வந்த நிலையில் இதுகுறித்து அந்தப் பெண் புழல் காவல் நிலையத்திற்கு புகார் ஒன்றையும் அனுப்பி இருந்தார். அதனை அடுத்து புழல் போலீசார் திருமணம் நடக்க இருந்த இடத்தில் நேற்று காலையில் அவரது வீட்டிற்கு சென்று சம்பந்தப்பட்ட அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

திருமணம் நடைபெற ஒரு மணி நேரமே இருந்த நிலையில் மணப்பெண்ணை போலீசார் அழைத்து சென்று திருமணத்தை தடுத்தி நிறுத்தினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் அடிப்படையில் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 328

0

0