யாருக்கும் பாரமா இருக்க விரும்பல… கணவன் மனைவி செய்த விபரீதம் : திருப்பூர் அருகே சோக சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2022, 6:29 pm

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பெருமாநல்லூரில் உள்ள எஸ்.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (60). இவர் தனது மனைவி வசந்தா (55)வுடன் வசித்து வந்துள்ளார்.

இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் திருமணமாகி திருப்பூரில் தனித்தனியே குடும்பமாக வசித்து வருகின்றனர்.

வசந்தாவிற்கு உடல் ரீதியாக பிரச்சனை உள்ளதால் தினந்தோறும் மாத்திரை உட்கொண்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்ப்பப்பை கோளாறு காரணமாக மருத்துவரை அணுகியுள்ளனர். வீட்டிலேயே இருந்து மாத்திரையை உட்கொள்ளுமாறு அறிவுரை கூறியுள்ளார்.

கணவன் மனைவி இருவருமே கடந்த வாரம் வசந்தா அவரின் அம்மா செல்லம்மாளிடம் (75) தங்களுக்கு வாழப் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் யாருக்கும் தொல்லையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் விஷம் அருந்தி தற்கொலையில் ஈடுபட்டனர்.

இன்று காலை அக்கம் பக்கத்தினர் கதவு பூட்டி இருந்ததை பார்த்து சென்ற பொழுது இருவரும் இறந்த நிலையில் இருந்துள்ளனர். உடனடியாக பெருமாநல்லூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து இருவரின் உடலையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பெருமாநல்லூர் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!