பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை : நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி!!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2022, 8:41 pm
PTR - Updatenews360
Quick Share

மதுரை : பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாக்கடை அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை என கூறியுள்ளார்.

மதுரை ஞான ஒளிவுபுரம் பகுதியில் உள்ள லயோலா ஐடிஐ கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது பாஜகவினர் தாக்குதல் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தியாகியை அடக்கம் செய்வது குறித்து இரண்டு நாட்களாக ராணுவத்தினரை தொடர்புகொண்டு கேட்டறிந்தேன், தியாகியை நல்லடக்கம் செய்யும் நாளில் பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகளிடம் பேசுவதற்கான சரியான தருணம் இல்லை,.

பிண அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை, பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் யார் என்பது தெரியும், பிணத்தை வைத்து அரசியல் செய்யும் நபர்கள் குறித்து நாளை பேசுகிறேன் என்றார்.

Views: - 236

1

0