ஆண்மையற்றவர் என கூறி ஜாமீன் கேட்ட சிவசங்கர் பாபா…!! தாறுமாறாக கேள்வி கேட்ட நீதிபதிகள்…!!!

Author: kavin kumar
23 August 2021, 8:38 pm
Shivashankar - Updatenews360
Quick Share

சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, தான் ஆண்மையற்றவன் என வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ‘சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி’ செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் சிலரும் இதற்கு உடந்தை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்களும் சிக்கியுள்ளன. புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இதுவரை மூன்று போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் மீது இதுவரை மூன்று போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், அவர் சிறைத்தண்டனையை பெற்று வருகிறார்.

இந்த வழக்கு தொடர்பாக, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மீது, 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கூடுதல் ஆதாரங்களைத் திரட்ட சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதற்கிடையே, ஜாமீன் வழங்கக் கோரி சிவசங்கர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், தனக்கு ஆண்மை இல்லை’ என்று சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் சிவசங்கர் பாபா வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், சென்னை அரசு பொது மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனையில் ஆண்மை இல்லை என்பது தெரிய வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இதுதொடர்பான அவரது ஜாமின் மனுவில், தான் ஒரு ஆண்மையற்றவன் என்பதால் யாரையும் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. அதனால் தன்னை ஜாமினில் விடுவிக்குமாறு கோரியிருந்த நிலையில், மகன் மற்றும் மகள் உள்ளபோது ஆண்மையற்றவர் என்று எப்படி கூற முடியும்? என்று ஜாமின் மனு மீதான வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன், அவரது மனுவை தள்ளுபடி செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Views: - 264

0

0