பசித்தால் எடுத்து கொள்ளவும்…பணம் வேண்டாம் : கடவுள் போல வந்த கஜா நண்பர்கள் குழு!!

15 May 2021, 2:41 pm
Free Food - Updatenews360
Quick Share

திருவாரூர் : ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு பசிக்க உணவு தரும் கஜா நண்பர்கள் குழு கடவுளை போல உதவி செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது முடக்கம் தமிழகத்தில் மீண்டும் அதிக கட்டுப்பாடுகளுடன் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதால் ஏழை எளியோர், ஆதரவற்ற முதியோர், யாசகர்கள், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் போன்றோர் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் பட்டினி கிடக்கும் சூழல் ஏற்பட துவங்கியுள்ளது.

இந்நிலையில் சேவை மனப்பான்மை உள்ள பல்வேறு தனியார் அமைப்புகள் அவ்வப்போது ஏழை எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறது. உணவு உடை உள்ளிட்டவைகளை மிகக் குறைந்த விலைக்கும் இலவசமாகவும் வழங்கி ஆதரவற்றோரை பாதுகாத்து வருகின்றனர்.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கஜா நண்பர்கள் குழு என்ற அமைப்பை சேர்ந்தோர் உணவு தேவைப்படுவோருக்கு பணம் இன்றி இலவசமாக உணவை வழங்க தொடங்கியுள்ளனர்.

மக்கள் வந்து செல்லும் மன்னார்குடி பந்தலடி பகுதியில் தள்ளுவண்டி ஒன்றில் தயிர் ,புளி சாதம் என பொட்டலங்களாக மடித்து அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு வாழைப் பழங்களும் இலவசமாக வழங்குவதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.

பசித்தால் எடுத்துக்கொள்ளவும் பணம் வேண்டாம்… என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து உணவு தேவைப்படுவோர் தங்களுக்கு தேவையான உணவு பொட்டலங்களையும், பழங்களையும் மகிழ்ச்சியுடன் எடுத்துச் செல்கின்றனர்.

உணவின்றி தவிப்பவர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுக்க வேண்டும் என்ற இந்த மனசுதான் கடவுள் என காண்போர்கள் பாராட்டி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 93

0

0