அன்புக்குரிய கதாநாயகனும், நண்பனுமான விஜயகாந்த் நீண்ட நாள் வாழ வேண்டும் : முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2021, 10:58 am
Stalin Wish Vijayakanth-Updatenews360
Quick Share

சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் அவர் தனது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வந்தார்.

தற்போது கொரோனா தொற்று காரணமாக தனக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூற யாரும் நேரில் வர வேண்டாம் என்றும், தனது பிறந்தநாளை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து கொண்டாடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், கேப்டன் விஜயகாந்திற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தே.மு.தி.க. நிறுவனரும் தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்தநாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Views: - 212

0

0