கள்ளக்காதலுக்கு இடையூறு.. கணவனை தீர்த்து கட்டிய மனைவி : 3 வருடங்களுக்கு பிறகு வசமாக சிக்கிய சம்பவம்..!!

13 April 2021, 1:25 pm
karur murder - updatenews360
Quick Share

கரூர் : கரூர் அருகே கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் அடுத்த பசுபதிபாளையம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட காந்தி கிராமம் அருகே உள்ள வடக்குபாளையம் பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி அன்று தலைப்பகுதியில் வெட்டப்பட்ட நிலையில், ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதனை அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், தேர்தல் வந்ததை அடுத்து குற்ற வழக்கு தொடர்பாக காவல்துறையினர் நாமக்கல், திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் கொலையான நபரின் புகைப்படத்தை ஒட்டி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கொலை தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தொலைபேசி மூலம் பசுபதிபாளையம் காவல்துறையினர் தகவல் கிடைத்தை அடுத்து, திருப்பூர் சென்று விசாரணை மேற்கொண்டதில் கொலையான நபர் சுப்புராஜ் என்பது தெரிய வந்தது. இறந்த போன சுப்புராஜ் மனைவியிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சுப்புராஜ் குடும்பதுடன் திருப்பூரில் குளிர்ப்பான கடை ஒன்றினை நடத்தி வந்துள்ளதாகவும், அப்போது அந்த கடைக்கு அடிக்கடி வந்த கரூரில் உள்ள தொழிற்பேட்டை சேர்ந்த கனகராஜ் என்பவருக்கும், சுப்புராஜ் மனைவிக்கும் இடையே கள்ளகாதல் ஏற்பட்டு உள்ளது. கள்ளகாதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை கொலை செய்ய திட்டம் தீட்டி மனைவியுடன் சேர்ந்து கரூர் வடக்குபாளையம் பகுதியில் கொலை செய்து சடலத்தை அங்கே விட்டு சென்றனர்.

காவல்துறையினரின் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சுமார் 3 வருடங்களுக்கு பின்னர் கொலை குற்றவாளிகள் கள்ளக்காதலன் கனகராஜ், பிரகாஷ், சந்தோஷ், சுப்புராஜ் மனைவி அன்னலட்சுமி, கொலையுண்டவரின் மாமியாரும், அன்னலெட்சுமியின் தாயாருமான ஜெயலலிதா உட்பட 5 பேரை பசுபதிபாளையம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

Views: - 87

0

0