சட்டவிரோத செங்கல் கடத்தல்: லாரி பறிமுதல்…ஓட்டுநர் மற்றும் செங்கல் சூளை உரிமையாளரை கைது செய்ய நடவடிக்கை..!!

Author: Aarthi Sivakumar
28 November 2021, 12:58 pm
Quick Share

கோவை: சட்டவிரோதமாக செங்கல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கோவை தடாகம் பகுதியில் செங்கல் சூளைகளில் மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மாங்கரை அடுத்த தைல மர பேருந்து நிறுத்தம் அருகே தனியார் செங்கல் சூளை ஒன்றில் சட்டவிரோதமாக செங்கற்களை கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு சென்றது. அப்போது லாரி (TN38CM 6280) ஒன்றில் செங்கல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியின் ஓட்டுநர் தப்பி செல்ல லாரி மட்டும் பறிமுதல் செய்யப்பட்டு தடாகம் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த தடாகம் காவல்துறையினர் ஓட்டுநர் மற்றும் செங்கல் சூளை உரிமையாளரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். லாரியில் இருந்த செங்கற்களின் மதிப்பு 60 ஆயிரம் இருக்கம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 111

0

0