வீட்டில் வைத்து சட்டவிரோதமாக மது சப்ளை செய்யும் பெண்… பொதுமக்கள் புகார்.. நடவடிக்கை எடுக்குமா காவல்துறை..?

Author: Babu Lakshmanan
2 May 2023, 9:18 am

பழனி அருகே கீரனூரில் வீட்டில் வைத்து பெண்மணி ஒருவர் மது விற்பனை செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கீரனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகள் உள்ளது. கீரனூர் பேருந்து நிலையம் எதிரே மூதாட்டி ஒருவர் 24 மணி நேரமும் மது விற்பனை செய்து வருவதாகவும், அதிகாலை 3 மணி முதலே விற்பனையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பள்ளி மாணவர்கள் முதற்கொண்டு மதுவை வாங்கி குடித்துவிட்டு சீர்கெட்டு வருவதாகவும், இதனால் பல இளைஞர்கள் குடும்பம் ஆதரவின்றி வருவதாகவும், இந்த மூதாட்டி கள்ளசந்தையில் அதுவும் வீட்டில் வைத்து மது விற்பனை செய்வதாகவும் எனக்கூறி பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

இந்த நிலையில், கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கீரனூர் போலீசார் மற்றும் மதுவிலக்கு காவல்துறையினர் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • The heir actor who divorced the actress has decided 10 வருடமாக குழந்தை இல்லாததால் புலம்பும் வாரிசு நடிகர்.. நடிகையை பிரிய முடிவு!