தொடர் கனமழை எதிரொலி: ஏற்காட்டில் பல இடங்களில் மண்சரிவு…போக்குவரத்து பாதிப்பு..!!

Author: Aarthi Sivakumar
5 November 2021, 2:00 pm
Quick Share

சேலம்: ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் ஏற்காடு குப்பனூர் சாலையில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு இரண்டு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

Impact of landslide traffic in Yercaud; Public suffering || ஏற்காட்டில்  மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு ;பொதுமக்கள் அவதி

குப்பனூர் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவிற்கு சேதாரம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சேலம் ஏற்காடு சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் சுமார் மூன்று நாட்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. அப்போது பெரும்பாலான வாகனங்கள் குப்பனூர் சாலையில் செல்வதற்கு திருப்பிவிடப்பட்டன.

Rains trigger mud slips, hit traffic on Yercaud, Nilgiris ghat roads -  DTNext.in

மேலும் தற்போது வரை சீரமைப்பு பணி நடந்து வருவதால் கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் சேலம் ஏற்காடு சாலையில் அனுமதிக்கப்படாத நிலையில், தற்சமயம் அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள் அரிசி மளிகை பொருட்கள் ஆகியவை குப்பனூர் சாலையிலேயே வந்து செல்கின்றன.

இந்நிலையில் நேற்று பெய்த மழையால் குப்பனூர் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் ஏற்காட்டிற்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை பாதிப்பின் காரணமாக விலை ஏற்றம் ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. தற்போது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Views: - 531

0

0