காதலிப்பதாக கூறி பள்ளி மாணவி கடத்தல்: ஏற்கனவே திருமணம் ஆனவன் போக்சோவில் கைது..!!

Author: Aarthi Sivakumar
4 October 2021, 5:51 pm
Quick Share

கோவை: பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று திருமணம் செய்த இளைஞரை ஈரோட்டில் கைது செய்துள்ள போலீசார் போக்சோ சட்டத்தில் சிறையிலடைத்தனர்.

கோவை நாகராஜபுரம் வெள்ளியங்கிரி வீதியை சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகன் ராமகிருஷ்ணன். ஓட்டுனராக பணிபுரிந்து வரும் ராமகிருஷ்ணன் தனது நண்பர் வீட்டிற்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதனிடையே அவரது நண்பர் வீட்டருகே பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் ராமகிருஷ்ணனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தான் ஏற்கனவே திருமணமானவன் என்பதை மறைத்த ராமகிருஷ்ணன், மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கடத்திச் சென்றுள்ளார்.

மாணவி மாயமானதை அடுத்த மாணவியின் பெற்றோர் இதுதொடர்பாக சாய்பாபாகாலனி காவல் நிலையம் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவுசெய்த போலீசார் மாணவியை தேடி வந்தனர். ராமகிருஷ்ணனின் நண்பர்களின் அலைபேசி எண்ணை ஆய்வு செய்த போலீசார் ராமகிருஷ்ணன் மாணவியுடன், ஈரோடு பகுதியில் பதுங்கி இருப்பதாக தெரியவந்ததை தொடர்ந்து தொடர்ந்து போலீசார் ஈரோட்டிற்கு விரைந்தனர்.

மாணவியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய ராமகிருஷ்ணனை கைது செய்த போலீசார் மாணவியை பத்திரமாக மீட்டனர். மேலும் ராமகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மாணவியை கடத்தி சென்று மூன்று மாதங்களாக போலீசாருக்கு தண்ணி காட்டிய ராமகிருஷ்ணனை போலீசார் களி தின்ன வைத்துள்ளனர்.

Views: - 501

0

0