ஃபுல் போதை.. பொது இடத்தில் கொட்டும் மழையில் Rest எடுத்த குடிமகன்..!
Author: Vignesh12 August 2024, 12:14 pm
திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் எங்கும் மழை நீர் ஆறாக ஓடியது.
இதற்கிடையே திண்டுக்கல் பேருந்து நிலைய பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஃபுல்லாக சரக்கு அடித்த வாலிபர் ஒருவர் நடந்து செல்ல முடியாமல் பேருந்து நிலையத்தின் நடுப்பகுதியில் கொட்டும் மழையில் ஹாயாக படுத்து விட்டார்.
அப்பொழுது பேருந்து நிலையத்திற்குள் வந்த தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் வாலிபர் ஒருவர் படுத்து கிடப்பதை பார்த்து ஹாரன் அடித்துக்கொண்டே உள்ளே நுழைந்தனர்.
ஆனாலும், அதைப் பற்றி எதுவும் கண்டுகொள்ளாத அந்த வாலிபர் சுமார் ஒரு மணி நேரம் கொட்டும் மழையில் படுத்து கிடந்தார். இதனை பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே காத்திருந்த பொதுமக்கள் குடிமகனின் தைரியத்தை கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தனர்.
மழை சிறிது குறைந்தவுடன் அங்கிருந்த கடைக்காரர்கள் போலீசாரின் உதவியுடன் அந்த வாலிபரை தரதரவென தூக்கிச் சென்று ஒதுக்குப்புறமாக உட்கார வைத்தனர். அப்பொழுதும் அந்த வாலிபருக்கு போதை குறைந்த பாடு இல்லை. பின்னர், வேறு வழியின்றி பேருந்து நிலைய பிளாட்பார்மை படுக்க வைத்து விட்டு சென்றனர்.
குடிபோதையில், வாலிபர் ஒருவர் பேருந்து நிலையத்தில் நடத்திய அட்ராசிட்டியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.