கள்ளக்குறிச்சியில் இடைவிடாது கேட்கும் மரண ஓலம்.. பலி எண்ணிக்கை மீண்டும் உயர்வு : பார்வையை இழந்த 12 பேர்!

Author: Udayachandran RadhaKrishnan
24 June 2024, 6:27 pm
Kalla
Quick Share

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி சட்டவிரோதமாக விஷ சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் வாங்கிக்குடித்துள்ளனர்.

மெத்தனால் கலக்கப்பட்ட விஷ சாராயத்தை குடித்ததால் பலருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட பலரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரும் உயிரிழந்தனர். ஒரு சிலர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

ஒருசிலர் வீட்டிலேயே உயிரிழந்தனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் விஷச்சாராயம் குடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேஷசமுத்திரம் பகுதியை சேர்ந்த சாமுண்டி என்ற பெண் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சையில் இருக்கும் 12 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்திருப்பதாக டாக்டர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 5 பெண்கள் உள்பட 59 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

Views: - 221

0

0