சிக்கன்ல ஏன் எலும்பு இல்லை….கடை ஊழியரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட திமுக பிரமுகர்….!!

By: Aarthi
12 October 2020, 9:52 am
chicken-case-updatenews360
Quick Share

சென்னை: கடையில் வாங்கிச் சென்ற சிக்கனில் எலும்பு இல்லாததால் கடை ஊழியரை திமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த கரையான்சாவடி அருகே சென்னீர்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த கடையில் கடந்த 6ம் தேதி சென்னீர்குப்பம் திமுக மாணவரணியை சேர்ந்த கார்த்தி என்பவர் சிக்கன் பார்சல் வாங்கி சென்றுள்ளார்.

வீட்டில் சென்று பார்த்த போது இவர் வாங்கிய சிக்கனில் எலும்பு இல்லாமல் கறியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி தனது நண்பர் ஒருவருடன் மீண்டும் ஓட்டலிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் கடையின் ஊழியர் சாகுல் ஹமீது திமுக பிரமுகர் கார்த்தியை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத திமுக பிரமுகர் சாகுல் ஹமீதை பலமாக கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அந்த ஊழியர் நிலை குலைந்து போனார்.

இதனையடுத்து, கடையில் இருந்தவர்கள் தகராறில் ஈடுபட்ட திமுக பிரமுகர் கார்த்தியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

கன்னத்தில் அறைந்ததில் கடை ஊழியர் சாகுல் ஹமீதுக்கு காது கேட்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் பூந்தமல்லி காவல்நிலையத்தில் திமுக பிரமுகர் கார்த்தி மீது புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே, பிரியாணிக்காக ஓட்டல் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்ட திமுக பிரமுகர்கள் சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் திமுகவை சேர்ந்த பிரமுகர் சிக்கனில் எலும்பு இல்லை எனக்கூறி ஊழியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 38

0

0