பிரபல கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

28 October 2020, 8:17 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் தனியாருக்கு சொந்தமான பிரபல கல்வி நிறுவனங்களில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .

ஈரோட்டில் தனியாருக்கு சொந்தமான பிரபல கல்வி நிறுவனங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரியில் சென்னை சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வருமான வரி துறை அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோர் பல பிரிவுகளாக பிரிந்து காலை முதல் தொடங்கி தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை செய்து வருகிறனர்.

இதன் ஒருபகுதியாக நாராயணவலசு பகுதியில் செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ பள்ளி மற்றும் பெருந்துறை சாலையில் உள்ள வாய்க்கால்மேடு பகுதியில் செயல்பட்டு வரும் கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் உள்ளிட்ட இடங்களில்
வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.