விசாரணையின் பிடியில் கோவை தொழிலதிபர்கள்… 3 இடங்களில் ஐ.டி. ரெய்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2024, 1:32 pm

வருமான வரித்துறையனிரின் கோவை சிக்கியுள்ளது. அடுத்தடுத்து 3 இடங்களில் தீவிர சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் இன்று பல்வேறு மாவட்டங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொழில் நிறுவனங்கள் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக கோவையிலும் மூன்று இடங்களில் வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்க: பெண்கள் முன்னேற பெரியாரே காரணம்.. சீமான் பேசிய வீடியோ வைரல்!

அதன்படி சிவானந்தா காலனியில் செயல்பட்டு வரும் ஆதித்யா அஸ்வின் பேப்பர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டுடியோ சாலையில் வசித்து வரும் Bull நிறுவனத்தின் உரிமையாளர் பொன்னுதுரை என்பவரின் இல்லம், உப்பிலிபாளையம் ராமானுஜம் நகரில் வசித்து வரும் லஷ்மி டூல்ஸ் உரிமையாளர் வரதராசன் என்பவரது இல்லம் ஆகிய இல்லத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேல் கொண்டு வருகின்றனர்.

நிறுவனத்திற்கான முறையாக ஆவணங்கள் உள்ளதா?, வரிகள் அனைத்தும் செலுத்தப்பட்டுள்ளதா என்ற அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!