கோவையை குளுமையாக்கிய சாரல் மழை: அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு..!!

15 July 2021, 4:02 pm
Quick Share

கோவை: கோவை புறநகர் பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் அடிவாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இரவு, பகலாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, மேற்கு மலை தொடர்ச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூர் அருகே உள்ள கோவை குற்றால நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் என்பதால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Views: - 124

0

0