தொடர் கனமழையால் நீர்வீழ்ச்சிகளில் நீர் வரத்து அதிகரிப்பு : கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2021, 2:45 pm
Kodai Falls -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : தொட‌ர்ம‌ழையின் கார‌ணமாக‌ கொடைக்கானல் அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் க‌ண்டு ம‌கிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ அவ்வ‌போது சார‌ல் ம‌ழையும் தொட‌ர்ந்து க‌ன ம‌ழையும் பெய்து வ‌ந்த‌தால் அருவிகளிலும் நீர் வ‌ர‌த்து அதிக‌ரித்து வருகிறது.

மேலும் வ‌ட்ட‌க்கான‌ல் நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறுநீர் வீழ்ச்சிக‌ளில் த‌ண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிற‌து. மேலும் கொடைக்கான‌லில் குளிர்ச்சியான‌ சூழ‌ல் நில‌வி வ‌ருகிற‌து.

இந்த நிலையில் கொடைக்கான‌லுக்கு வ‌ரும் சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் ரம்மியமான சூழலில் உள்ள அருவிக‌ளை க‌ண்டு ம‌கிழ்ச்சி அடைவ‌துட‌ன் செல்பி எடுத்து கொண்டாடுகின்றனர்.

Views: - 209

0

0