மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரிப்பு…!!!

By: S
11 October 2020, 10:53 am
metur dam - updatenews360
Quick Share

மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 3வது நாளாக அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 98.50 அடியாக உயர்ந்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை இல்லாத காரணத்தினால் அணைக்கு வரும் நீர் வரத்து குறைந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, அணைக்கு வரும் நீரின்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று வினாடிக்கு 22,969 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது.

இன்று காலை நிலவரப்படி, வினாடிக்கு 24,036 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.50 அடியாக உயர்ந்துள்ளது.

டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்இருப்பு 62.91 டிஎம்சியாக உள்ளது.

Views: - 34

0

0