கடன் கொடுத்தவர்களை கல்லால் தாக்கிய சுயேட்சை வேட்பாளர் : பண மோசடி வழக்கில் கைதானதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 February 2022, 5:30 pm
Independent Candidate Arrest - Updatenews360
Quick Share

அரியலூர் : பண மோசடி வழக்கில் அரியலூர் நகராட்சியில் சுயேட்ச்சையாக போட்டியிடும் வேட்பாளரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் நகரில் சாக்கோட்டை தெருவை சேர்ந்தவர் மணிவேல். அதிமுகவை சேர்ந்த இவர் தற்பொழுது நகர்ப்புற தேர்தலில் அதிமுக சார்பில் சீட் வழங்காததால் 16வது வார்டு சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் செந்துறை ஜாகிர் உசேன் என்பவர் நடத்தி வரும் ஹார்டுவேர் கடையில் கடந்த ஆறு மாதமாக கம்பி வாங்கியுள்ளார். அந்த வகையில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் கம்பி வாங்கிய வகையில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 563 ரூபாய் பாக்கி வைத்துள்ளார்.

அந்த தொகையை தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி அரியலூர் கவரதெரு அருகே மணிவேலிடம் பணம் கேட்கும் போது பணத்தை தர முடியாது என்று அசிங்கமாக திட்டி கீழே கிடந்த கல்லை எடுத்து பணம் கேட்டு வந்தால் மண்டையை உடைத்து உடைத்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இந்நிலையில் வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் மணிவேலை கைது செய்தனர். சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Views: - 856

0

0