சூட்கேசில் பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கு : தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… சிக்கிய கொலையாளியின் பகீர் வாக்குமூலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 February 2022, 4:27 pm
Murder Arrest -Updatenews360
Quick Share

திருப்பூர் பெண் கொலை வழக்கில் தேடப்பட்ட வடமாநில கொலையாளி ஓசூர் அருகே கைது : தனிப்படை போலீசார் அதிரடி

திருப்பூர் : பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து கழிவுநீர் கால்வாயில் போட்டு சென்ற கொலையாளிகளில் ஒருவரை தனிப்படை போலீசார் இன்று ஓசூர் அருகே கைது செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் தாராபுரம் செல்லும் சாலையில் பொல்லிக்கலிபாளையம் பகுதியில் சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் சூட்கேசில் அடைக்கப்பட்ட சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் போலீஸாரால் மீட்கப்பட்டது.

இந்த கொலை சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

இந்த நிலையில் ஓசூர் பகுதியில் திருப்பூர் பெண் வழக்கில் தேடப்படும் கொலையாளி பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் சரவண ரவி தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று ஓசூர் அருகே உள்ள பாத்தகோட்டா கிராமத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் அங்கு பதுங்கியிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த கொலை குற்றவாளி கேய்லால் சாவ்ரா (வயது 27) என்பவனை கைது செய்தனர்.

திருப்பூர் பெண் கொலை வழக்கில் கேய்லால் சாவ்ரா ஏ2 குற்றவாளி என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட கொலையாளியை போலீசார் திருப்பூருக்கு வாகனத்தில் அழைத்து சென்றனர்.

Views: - 1366

0

1