கடும் சரிவில் இந்தியா புல்ஸ் நிறுவனம்!!

24 August 2020, 6:40 pm
India Bulls - Updatenews360
Quick Share

வீட்டு கடன் வழங்கும் இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் முதல் காலாண்டில் சரிவை சந்தித்துள்ளது.

இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் நடப்பண்டு நிதியாண்டின் முதல் காலாண்டில் லாபம் 66 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான முதல் காலாண்டில் கொரோனா பொதுமுடக்கம் பிரச்சடினை எதிர்கொள்ள இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் ரூ.300 கோடி ஒதுக்கியிருந்ததாக கூறியுள்ளது.

அதனால் தற்போது முடிவடைந்த ஜுன் மாதம் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டை காட்டில் 66 சதவீதம் சரிவடைந்து ரூ.273 கோடியானதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த நிதியாண்டின் இமே காலக்கட்டத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.802 கோடியாக அதிகரித்து காணப்பட்டதாகவும், கணக்கீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த கடன் மதிப்பு ரூ.73,129 கோடியாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

ஜுன் காலாண்டில் மொத்த வாராக்கடன் 2.20 சதவீதம் என்ற மதிமான அளவில் இருந்ததாகவும், நீண்ட கால கடன் திட்டத்தின் மூலமாக ரூ.28 ஆயிரம் கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளதாக இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் துணை நிர்வாக இயக்குநர் அஷ்வினி குமார் ஹீடா தெரிவித்துள்ளார்.