ராயல் சல்யூட்… பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம் : சோகத்தில் மூழ்கிய கிராமம்!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2025, 4:17 pm

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து கூருகிறது. எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆந்திராவை சேர்ந்த ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம் அடைந்துள்ளார்.

பாகிஸ்தான் தாக்குதலை எதிர்கொண்டு முறியடிக்க எல்லையில் 60 ஆயிரம் வீரர்கள் களமிறங்கியுள்ளனர். பாதுகாப்பு பயிற்சியில் இருந்த வீரர்களக்கு அங்கு சென்றுள்ளனர்.

இதையும் படியுங்க: போர் பதற்றம்…ஐபிஎல் தொடர் ரத்து : பிசிசிஐ அறிவிப்பு!

இந்த தாக்குதலில் முரளி நாயக் என்ற ராணுவ வீரர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது இந்திய மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அல்லது நேற்று முன்தினமே இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Indian soldier martyred in Pakistan attack

அவரது உடல் நாளை ஆந்திரா மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள அவருடைய சொந்த கிராமத்துக்கு கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து முரளியின் பெற்றோர் தைரியமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆறுதல் தெரிவித்தனர்.

இதனையடுத்து முரளி நாயக் குடும்பத்தினரை அமைச்சர் சவிதா நேரில் சந்தித்துப் மாநில அரசு சார்பில் ₹ 5 லட்சம் காசோலையை பெற்றோரிடம் வழங்கினார். கோரண்ட்லா நகரின் முக்கிய சந்திப்பில் துணிச்சலான வீர ஜவான் முரளி நாயக் சிலை அமைக்கப்படும் என அமைச்சர் சவிதா தெரிவித்தார்.

  • vidaathu karuppu serial copy is suriya 45 விடாது கருப்போட காப்பியா? சூர்யா நடிக்கும் படத்தின் டைட்டிலால் எழுந்த சந்தேகம்?
  • Leave a Reply