இந்தியாவின் கடைசி காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங் : புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் விமர்சனம்!!!

Author: Udayachandran
30 July 2021, 7:11 pm
Pondy Saminathan 1 -Updatenews360
Quick Share

புதுச்சேரி : தொலைபேசி ஒட்டுகேட்பு மூலம் தான் கடந்த கால காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது என கூறும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி அதனை நிரூபிக்க தயாரா என பாஜக மாநில தலைவர் சாமிநாதன் கேள்வி எழுப்பிள்ளார்.

புதுச்சேரி பாஜக மாநில அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் சாமிநாதன், அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பில் ஒபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு அளித்துள்ள பாரத பிரதமருக்கு புதுச்சேரி பாஜக சார்பில் நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறிய அவர் இதை புதுச்சேரி அரசு அமுல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது தொலைபேசி உரையாடல் ஒட்டுகேட்பு மூலமாக தான் கடந்த காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது முற்றிலும் தவறானது என்றும், இதனை நாராயணசாமி நிரூபிக்க தயாரா என கேள்வி எழுப்பினார்.

நாராயணசாமயின் திறமையற்ற நிர்வாகத்தினல் மட்டுமே கடந்த கால காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததாகவும் தெரிவித்தார். இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் கடைசி பிரதமராக மன்மோகனசிங் மட்டுமே இருப்பார் என்றும் ராகுல்காந்தி வேண்டும் என்றால் இத்தாலியில் பிரதமர் ஆகலாம் எனவும் சாமிநாதன் தெரிவித்தார்.

Views: - 466

0

0