நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவி : அசத்திய அரசுப் பள்ளி மாணவிகள்!!

19 October 2020, 11:08 am
Velliangadu - Updatenews360
Quick Share

கோவை : நீட் தேர்வில் மலைவாழ் கிராமத்தை சேர்ந்த மாணவி உட்பட அரசுப் பள்ளி மாணவிகள் இரண்டு பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கடந்த மாதம் நடந்த நீட் தேர்வை நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் எழுதினர். இத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியானது. இந்த தேர்வை காரமடை அடுத்த வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த நான்கு மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்.

இதில், ரம்யா, பிஸ்டிஸ் பிரிஷ்கா ஆகிய இரு மாணவியர் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். ரம்யா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிஸ்டிஸ் பிரிஷ்கா, 167 மதிப்பெண்களும், ரம்யா, 145 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இந்த அரசு பள்ளியில், 30 சதவீதத்திற்கு மேல் மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவியரை பள்ளியின் தலைமை ஆசிரியர் பெள்ளி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமதாஸ், ஆசிரியர்கள் பாராட்டினர்.

நீட் தேர்வுக்காக பல மாணவர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டும், சிலர் தேர்வுக்க பயந்து தவறான பாதைகளை தேர்ந்தெடுத்த நிலையில், மலைவாழ் மக்களை சேர்ந்த பழங்குடியின மாணவி உட்பட அரசு பள்ளி மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்றிருப்பது பாராட்டுகளை குவித்து வருகிறது.

Views: - 29

0

0