புதுமையை பரப்பும் கைவினைப்பொருள் கண்காட்சி : தூக்கி வீசப்படும் பொருட்களில் உருவான கைவண்ணம்!!
Author: Udayachandran RadhaKrishnan7 January 2022, 7:54 pm
கோவை : புதுமை தொழில்நுட்பத்தை பரப்புதல் திட்டத்தின் கீழ் கைவினை பொருள் கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற்றது.
நாம் அன்றாடம் பயன்படுத்தி, தூக்கி எரியும், பொருட்களின் கழிவுகளை, கொண்டு மனம் வியக்கும், வண்ணங்களில் பல்வேறு கைவினை பொருட்களை உருவாக்கி, அதனை மீண்டும் பண்படுத்தும் வகையில், கைவினைப்பொருள் செயல்முறை, பயிற்சி வகுப்புகள்,கோவை சரவணம்பட்டி பகுதியில், உள்ள கேஜிஐஎஸ்எல், கல்லூரியில், கடந்த 5 ம்தேதி முதல் இன்று 7 ம்தேதி வரை நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மாநில மன்றம், தமிழ்நாடு உயர் கல்வித்துறை மற்றும் கேஜி கலை அறிவியல் கல்லூரி இனைந்து, கைவினை பொருள் செயல்முறை பயிற்சி வகுப்பாக நடைபெற்றது.
புதுமை தொழில்நுட்பத்தை பரப்புதல் திட்டத்தின் கீழ், மக்கும் தன்மையுடைய கைப்பைகள், கழிவு பொருட்கள், மற்றும் வாழைநார், தேங்காய் ஓடுகள், மூங்கில், போன்றவை களில் இருந்து, இரவு மின்னோளி குடுவைகள், மூங்கில் கப்பல்கள், வாழைநார் கூடைகள், வாழைநார் பைகள், தேங்காய் தொட்டியில் அலங்கார பொருட்கள் என பல்வேறு கைவினை பொருட்களை உருவாக்கும் பயிற்சி வகுப்புகள் தொழில் முறை பயிற்சியாளர்கள் மூலம் நடத்தப்பட்டது.
மேலும், கைவினை பொருட்களால் தயாரிக்கபட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய கண்காட்சியும் நடைபெற்றது, இதில் கிராமப்புற மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த 50 க்கும் மெற்பட்ட பெண்கள் பயனடைந்தனர்.
இந்த நிகழ்ச்சியினை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கதிர்வேலு, கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
மேலும் இதில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் செயல் உறுப்பினர் முனைவர் ஸ்ரீ னி வாசன், கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார், மேலும் முனைவர், இரத்தினமாலா, கேஜிஐஎஸ்எல் கல்லூரியின் முதல்வர் வனிதா, தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் உஷா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்
0
0