பிரிக்க முடியாதது.. மின்வெட்டும் திமுக ஆட்சியும் : திருவிளையாடல் ஸ்டைலில் பதிலளித்த அதிமுக எம்எல்ஏ!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2021, 3:11 pm
Natam Viswanathan- Updatenews360
Quick Share

திண்டுக்கல் : திமுக ஆட்சியையும் மின்வெட்டையும் பிரிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விமர்சித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை நத்தம் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன், அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக 7 வருடங்கள் இருந்து உள்ளேன்.ஆனால் மின்வெட்டுக்கு காரணம் அணில் தான் என்று எனக்கு தெரியவில்லை.

நீட் தேர்வு பற்றியும் நீட் தேர்வு இருக்கா? இல்லையா? என்று விரிவான விளக்கம் இல்லாமல் இன்று வரை மாணவர்களின் வாழ்கையில் திமுக விளையாடுவதாக குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சிக்கு வந்தாலே அராஜக ஆட்சி தான். சட்டம் ஒழுங்கு பற்றி மக்களே தெரிந்து கொள்வார்கள் என அவர் கூறினார்.

Views: - 310

0

0