பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆய்வாளர் : காவல் நிலையத்தில் பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத அவலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 October 2021, 10:57 am
Woman Police Harassed -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பழனியில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கீரனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் வீரகாந்தி. இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு அதே காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட ஏ.டி.எஸ்.பி லாவண்யா தலைமையில் புகார் கொடுத்த பெண் மற்றும் காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீசாரிடமும் விசாரணை நடைபெற்றது.

மேலும் குற்றச்சாட்டிற்கு உள்ளான ஆய்வாளர் வீரகாந்தி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் பழனி மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் வீரகாந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 379

0

0