இன்ஸ்டா குயின் சிறுமியை காப்பாற்றியிருக்கலாம்.. ஆனா அதை செய்யவே இல்ல : குமுறும் பெற்றோர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2023, 11:58 am

திருவள்ளூர் பெரியகுப்பத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி- கற்பகம் தம்பதியினர், இவர்களுக்கு ஒரு மகனும், நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது பிரதிக்ஷா என்ற மகளும் உள்ளனர்.

9 வயது பிரதிக்ஷா திருவள்ளூர் RMJAIN மெட்ரிக் மேல்நிலை பள்ளி என்ற தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.

சிறுமி பிரதிக்ஷா இன்ஸ்டாவில் தனக்கென ஒரு ஐடியை கிரியேட் செய்து அதில் 50க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அசைவு கொடுத்து திருவள்ளூர் பகுதியில் இன்ஸ்டாவால் புகழ் சிறுமியாகவே பலரால் அறியப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் சிறுமி பிரதிக்ஷா தனது பாட்டி வீட்டின் எதிரில் விளையாடிக் கொண்டிருந்தார்.

இதனை கண்ட பிரதீக்ஷாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி தாய் கற்பகம் சிறுமியை விளையாடியது போதும் வீட்டிற்கு சென்று படிக்கும்படி கண்டித்து வீட்டின் சாவியை சிறுமி பிரதிக்ஷாவிடம் கொடுத்துவிட்டு இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக தாயும் தந்தையும் தனது மகனுடன் சென்று வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்ததால் பலமுறை சிறுமி பிரதிக்ஷாவின் பெயரை அழைத்து தந்தை கதவை தட்டியும் திறக்காததால் பயந்து போன தந்தை கிருஷ்ணமூர்த்தி ஜன்னல் கதவை உடைத்து பார்த்தபோது இன்ஸ்டா குயின் சிறுமி வெள்ளை நிற சிறிய துண்டினால் ஜன்னல் கம்பியில் கட்டி தூக்கிட்டு கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று குழந்தையை மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்

பின்னர் மருத்துவர்கள் குழந்தைக்கு உயிர் காக்கும் சிகிச்சையில் பலவிதமாக அளித்தும் குழந்தை ஒரு மணி நேர முயற்சிக்குப் பின் உயிரிழந்தார்

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் நகர காவல் துறையினர் சிறுமி உயிரிழப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்

இன்ஸ்டாவில் பல பாடல்களுக்கு இசைவு கொடுத்து திருவள்ளூர் பகுதியில் பெரும் புகழை பெற்று இன்ஸ்டா குயின் சிறுமியாக அறியப்பட்ட பிரதிக்ஷா உயிரிழந்த சம்பவத்தால் பிரதிக்ஷாவின் குடும்பத்தினர் உறவினர் மட்டுமல்லாமல் திருவள்ளுவர் நகரமே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

இதனிடையே 9 வயது சிறுமியால் எப்படி தற்கொலை செய்திருக்க முடியும் என்று சந்தேகம் அடைந்த போலீசார் நேரில் வந்து ஆய்வு சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

அப்பொழுது சிறுமி பிரதிக்‌ஷா வீட்டில் படுக்கையறையில் மெத்தையின் மீது சிறிய ஸ்டூல் போட்டு ஏறி ஜன்னல் கம்பியில் துண்டை கட்டி தூக்குப்போட்டு கொண்டு அதன் பிறகு ஸ்டூலில் இருந்து குதித்ததும், அப்பொழுது துண்டு கழுத்தை முழுவதுமாக நெருங்காததால் தூக்கில் தொங்கியபடியே சிறுமி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெளியேசென்ற கிருஷ்ணமூர்த்தி உடனடியாக வீட்டிற்கு வந்திருந்தால் ஒருவேளை சிறுமியை காப்பாற்றி இருக்க முடியும் என்றும் ஆனால் ஒரு மணி நேரம் கழித்து வந்ததால் சிறுமியை காப்பாற்ற முடியாமல் போனதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

சிறுமி பிரதிக்க்ஷா தனது தோழிகளுடன் விளையாடியதை தந்தை கண்டித்ததால் ஒருவேளை மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!