பார்டரை தாண்டினால் கட்டாய பரிசோதனை: தமிழக – ஆந்திரா மாநில எல்லையில் தீவிர கண்காணிப்பு..!!

Author: Aarthi Sivakumar
13 August 2021, 5:36 pm
Quick Share

வேலுார்: தமிழக – ஆந்திர மாநில எல்லையான காட்பாடி அருகே மீண்டும் கொரோனா பரிசோதனை தீவிரமடைந்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக வேலுாரில் இருந்து ஆந்திரா மாநிலம் சித்துார், திருப்பதி, திருமலை, காளஸ்திரி பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இ- பாஸ் உள்ள வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. இரு மாநில அரசு, தனியார் பேருந்துகள் அந்தந்த மாநில எல்லை வரை இயக்கப்படுகின்றன.

வேலுாரில் இருந்து சித்துாருக்கு செல்லும் பேருந்துகள் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை வரை இயக்கப்படுகின்றன. அங்கிருந்து சிறிது துாரம் நடந்து சென்று ஆந்திரா மாநில பேருந்துகளில் பயணிகள் சென்று வந்தனர். இதுபோல வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யாமல் இருந்தனர்.

தற்போது இரு மாநிலத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் இரு மாநில எல்லையை கடந்து செல்வர்களுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை செய்கின்றனர். கொரோனா பரிசோதனைக்கு மறுப்பவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். மேலும், முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றது.

Views: - 675

0

0