அண்ணா பல்கலை.,யில் பன்னாட்டு அளவில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் : அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2021, 11:58 am
Ponmudi - Updatenews360
Quick Share

சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றும். பன்னாட்டு அளவில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

வடிவமைப்பு, ஆராய்ச்சிக்கு தேவையான பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும் என்றும், செயல்முறை பாடத்திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு ஆலைகளில் பயிற்சி அளிப்பதை பாடத்திட்டமாக அமைப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் மீது உள்ள குற்றசாட்டுகள் நீங்கும் என்று நம்பிக்கை உள்ளது என கூறிய அமைச்சர், புதிய துணைவேந்தராக பொறுப்பேற்ற வேல்ராஜ்-க்கு வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Views: - 260

0

0