கோவை மேயரின் சொத்து மதிப்போ ரூ.73 லட்சம்…வசிப்பதோ வாடகை வீட்டில்…: அதெப்படி…கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்..!!

Author: Rajesh
4 March 2022, 3:42 pm
Quick Share

கோவை: கோவை மாநகராட்சி மேயராக பதவியேற்றுள்ள கல்பனாவின் கணவர் சொத்து மதிப்பு 67 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவர் வாடகை வீட்டில் வசித்து வருவது குறித்து சமூக வலைதளங்களில் பொதுமக்கள் எழுப்பியுள்ள கேள்விகள் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் பெரிய தொழில் நகரம் என்றால் அது கோவைதான். அத்தகைய வருவாய் அதிகம் உள்ள மாநகராட்சிக்கு மேயர் வேட்பாளர் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என கூறப்படும் கல்பனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் போட்டியிட்டு கோவை மாநகராட்சியில் 19 ஆவது வார்டில் வெற்றி பெற்றார். இவர் 1971 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். வெற்றி பெற்றதை அடுத்து முதல்வர் ஸ்டாலினை சந்திக்க சென்ற கல்பனா காரில் செல்ல வசதியில்லாமல் கோவையிலிருந்து சென்னைக்கு பேருந்தில் வந்தார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Image

சொந்த வீடு கூட இவருக்கு இல்லையாம். வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கோவை கணபதி பகுதியில் மணியகாரம்பாளையத்தில் இசேவை மையம் நடத்தி வருகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி, எளியவர்களுக்கு கூட திமுகவில் தலைவர் பொறுப்பு கிடைக்கும் என திமுக தொண்டர்கள் நெகிழ்ந்து போயிருந்தனர்.

Image

இந்நிலையில், சமூக வலைதளங்களில் மேயர் கல்பனா மற்றும் அவரது கணவரின் சொத்து மதிப்பு குறித்து நெட்டிசன்களும், பொதுமக்களும் எழுப்பியுள்ள கேள்வி திமுக தொண்டர்களையே யோசிக்க வைத்துள்ளது. மேயர் கல்பனாவின் வேட்பு மனு தாக்கலின் போது சமர்பித்த பிரமாண பத்திரத்தில் இவரது சொத்து மதிப்பு 6 லட்சத்து 80 ஆயிரத்து 61 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image

இவரது கணவர் ஆனந்தகுமாரின் சொத்து மதிப்பு 67 லட்சத்து 10 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாதம் ரூ.5000 கொடுத்து வாடகை வீட்டில் வசித்து வருவதாக மேயர் வேட்பாளர் கல்பனா தெரிவித்துள்ளார்.

Image

பிரமாண பத்திரத்தில் புகைப்படத்துடன் 67 லட்சத்து 10 ஆயிரம் சொத்து மதிப்புள்ள கணவருக்கு, 6 லட்சத்து 80 ஆயிரத்து 61 ரூபாய் சொத்து மதிப்புள்ள மேயர் வேட்பாளருக்கு ‘சொந்த வீடு இல்லை…ஆனால் லட்சக்கணக்கில் காசு இருக்குது’ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளது வைரலாகி வருகிறது.

Views: - 844

1

1