போதையில் நடுரோட்டில் இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்.. பொது சொத்துக்கள் சேதம்.. அமைச்சர் தொகுதியில் அவலம்.!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2025, 12:04 pm

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த குரும்பூர் கடைவீதி பகுதியில் நேற்று இரவு சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட புல்லிங்கோ பாய்ஸ் பிறந்தநாள் விழா ஒன்று கொண்டாடியதாக தெரிய வருகிறது.

போதையின் உச்சத்தில் இருக்கும் அந்த புல்லிங்கோ பாய்ஸ் சாலையின் நடுவே ஒருவருக்கொருவர் கேக்கை ஊட்டி கொண்டும், சாலையின் ஓரமாக இருந்த பொருட்களை நடுரோட்டில் போட்டு உடைத்து விளையாடும் நிகழ்வுகள் அவ்வப்பொழுது அரங்கேறி வருகிறது.

மேலும் சாலையில் பயணிக்கும் வாகனங்களை நிறுத்தி அவர்களுக்கு பிறந்தநாள் கேக்கை ஊட்டுவதும், நிறுத்தாமல் செல்லும் வாகனங்களை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுவதுமாக அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து நாம் விசாரிக்கையில் குரும்பூர் பகுதியானது திமுக அரசின் பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் மெய் யநாதனின் ஆலங்குடி தொகுதியில் வருகிறது என்றும் இந்த பகுதியில் திமுக பிரமுகர்கள் ஆதரவு பெற்ற சில பேர் கள்ள மது விற்பனையில் ஈடுபடுவதோடு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Intoxicated youth celebrate birthday in the middle of the road.. Public property damaged

இதுகுறித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் பலமுறை தகவல் தெரிவித்த நிலையில் எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இளம் வயது இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதும் போதையில் உச்சத்தில் சாலையின் நடுவே ரகளையில் ஈடுபடுவதும் எதிர்கால சந்ததிகளின் சமூக சீரழிவை உருவாக்கி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

திமுக ஆட்சியில் திமுக அமைச்சரின் தொகுதியிலேயே கள்ள மது விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை படுஜோராக நடைபெற்று இளைஞர்கள் பலர் போதையின் பாதைக்கு சென்று நடுரோட்டில் ரகளையில் ஈடுபடும் வீடியோ தற்பொழுது வெளியாகி அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

  • abishan jeevinth debut as a hero in new movie பிரதீப் ரங்கநாதனை தொடர்ந்து ஹீரோவாக அறிமுகமாகும் ஃபீல் குட் படத்தின் இயக்குனர்? அடடா…
  • Leave a Reply