உட்கட்சி பூசல்… தேர்தல் தோல்வி எதிரொலி : கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மாற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2021, 11:10 am
DMK Executive Change- Updatenews360
Quick Share

கோவை : கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த தென்றல் செல்வராஜ் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்ட டிதிமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தென்றல் செல்வராஜ் அப்பொறுப்பில் விடுவிக்கப்படுகிறார் என்றும், அவருக்கு பதிலாக டாக்டர். கி. வரதராஜன் அந்த பெறுப்பில் நியமிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் நியமிக்கப்ப்டட கோவை தெற்கு திமுக பொறுப்பாளர் வரதராஜனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கி.வரதராஜன் ஆர்தோ மருத்துவராக உள்ளார். மேலும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளராக களமிறங்கி தோல்வியை தழுவினார். தோல்விக்கு கட்சிக்கு இருந்த பூசல்களே காரணம் என உடன்பிறப்புகள் மேலிடத்தில் புகாரளித்தனர்.

உட்கட்சி பூசல் காரணமாகவும், வரும் உள்ளாட்சி தேர்தலில் பொள்ளாச்சியில் திமுக விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று கருதுவதால் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜை நீக்க திமுக உடன்பிறப்புகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக படுதோல்வியடைந்தது. இதனால் கோவை மண்டலத்தில் தோல்வி குறித்து திமுக விசாரணை நடத்தி பொறுப்பில் உள்ளவர்கள் மாற்றியமைகப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

Views: - 258

0

0