இந்தியாவின் 2வது பெரிய கோ-ஆப்பரேட்டிவ் பால் பொருட்கள்…கோவையில் அறிமுகம்!!

2 March 2021, 1:03 pm
Nandhini Milk -Updatenews360
Quick Share

கோவை : இந்தியாவின் 2வது பெரிய கோ-ஆப்பரேட்டிவ் பால் உற்பத்தி நிறுவனமான நந்தினி பால் மற்றும் பால் தயாரிப்புகள் கோவையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டன.

கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் அமைப்பின் தயாரிப்பான நந்தினி பால் மற்றும் பால் பொருட்களை சென்னை ஆர்.கே.ஆர் டைரி புராடக்ட்ஸ் நிறுவனம் கோவையில் இன்று அறிமுகம் செய்தது.

இந்த நிகழ்ச்சியில் சாமுல் தலைவர் நஞ்சுண்ட பிரசாத், சாமுல் நிர்வாக இயக்குனர்கள், ஆர்.கே.ஆர் நிறுவன தலைவர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சாமுல் தலைவர் நஞ்சுண்ட பிரசாத் கூறுகையில், நாள் ஒன்றுக்கு 80 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுவதாகவும், மேலும், 50க்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டு பொருட்கள் மற்றும் 25 வகையான ஐஸ்கிரீம் வகைகள் தயாரிக்கப்படுவதாகவும் கூறினார்.

தொடர்ந்து ஆர்.கே.ஆர் நிறுவன தலைவர் ராஜ்குமார் கூறுகையில், நந்தினி பால் இந்தியாவில் 2வது மிகப்பெரிய கோ-ஆப்பரேட்டிவ் பால் நிறுவனம் என்றும் கோவையில் முதற்கட்டமாக தினமும் 10 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும் கூறினார்.

Views: - 20

0

0