நாகரீகமான சமுதாயத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் ஏற்புடையதா? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2021, 1:41 pm
Madurai HC - Updatenews360
Quick Share

நாகரீகமான சமுதாயத்தில் துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவம் நடைபெறுவது ஏற்புடையதா? என மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கில், தூத்துக்குடியில் எந்தவித ஆயுதமும் இன்றி போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

ஒரு நாகரிகமான சமுதாயத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறுவது ஏற்புடையதா? எனவும் கேள்வி எழுப்பினர். துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்த தேசிய மனித உரிமை ஆணைய புலனாய்வு பிரிவு அறிக்கையையும், துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்த தமிழக முதன்மை செயலாளர் அறிக்கையையும் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாள் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது , போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 179

0

0