என்னடா இது தை மாசத்துல பனிப் பொழிவா? 3 மாத கால தாமதமாக உதகையில் உறைபனி!!

28 January 2021, 10:08 am
Ooty Fog - Updatenews360
Quick Share

நீலகிரி : உதகை நகரில் கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

கடந்த இரண்டு நாட்களாக உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடும் உறைபனி நிலவுகிறது. இதனால் பள்ளத்தாக்கு மற்றும் குடியிருப்பு பகுதியிலுள்ள அனைத்து புல்வெளிகளிலும் உறை பனி படர்ந்து காணப்படுகிறது.

அதிகாலை வேளையில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் உறை பனியில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள நெருப்பு மூட்டி குளிரை சமாளித்து வருகின்றனர்.

ஒருபுறம் இது இருக்க குளிரை பாதுகாக்கும் ஆடைகள் விற்பனை கடந்த இரண்டு நாட்களாக சூடுபிடித்துள்ளது அதிகாலை 6 மணி முதல் 11 மணி வரை நீடிக்கும் உறை பனியின் நேரம் வியாபார நேரமாக இருக்கிறது என குளிராடைகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

முன்கூட்டியே வரவேண்டிய உறை பனி சுமார் 3 மாதங்களுக்கு பிறகு பொழிவதால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Views: - 24

0

0