இஸ்ரேல் போர் எதிரொலி… புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை ; மீண்டும் 44 ஆயிரத்தை கடந்தது ஒரு சவரன்…!!

Author: Babu Lakshmanan
13 October 2023, 6:51 pm

இஸ்ரேல் போர் எதிரொலி… மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை ; சவரனுக்கு ரூ.800 உயர்வு…!!

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது.

இந்த நிலையில், இன்று காலை குறைந்து காணப்பட்ட தங்கம் விலை, மாலையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  அதாவது, சவரனுக்கு ரூ.800 உயர்ந்து அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.44,080-ஆகவும், கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.5,510ஆக விற்பனையாகிறது. இது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…