‘இரு-யா போட்டுட்டு இருக்கோம்ல’… கேள்வி கேட்ட நபர்… சத்தம் போட்ட திமுக எம்பி ஆ.ராசா..!!!

Author: Babu Lakshmanan
13 October 2023, 6:04 pm
Quick Share

திருப்பூர் மாவட்டத்தில், வளர்ச்சி்த்திட்ட பணிகளை துவக்கி வருகை தந்த நீலகிரி எம்.பி ராசா முற்றுகையிட்ட பெண்கள், நூறு நாள் வேலைத்திட்டத்தில் கடந்த இரு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஆலத்தூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், ரூ.1.25கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சமுதாயநலக்கூடம், அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட 3வது வார்டு ஏரித்தோட்டம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.1.21 கோடி மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி, 16,17, 18வது வார்டு சாலை மையப்பகுதியில் ரூ.45 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மின் விளக்குகளை திறந்து வைத்தல் என மொத்தம் ரூ.2 கோடியே 91 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை நீலகிரி எம்.பி ஆ. ராசா துவக்கி வைத்தார்.

அப்போது, அங்கிருந்த பெண்கள, நூறு நாள் வேலைத்திட்டத்தில் கடந்த இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், ஆலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேருந்து வசதி இல்லை எனவும் ஆ. ராசாவிடம் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பந்தபட்ட துறை அலுவலரை அழைத்து விபரங்களை கேட்டறிந்த எம்.பி., கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

தொடர்ந்து, நபர் ஒருவர் கேள்வி கேட்க, ஆத்திரமடைந்த ஆ.ராசா, ‘இரு-யா போன் போட்டுட்டு இருக்கோம்’ என சத்தம் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 423

0

0