இது கூடத் தெரியாமல் ஸ்டாலின் CMஆக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு : கேரண்டி தயார்.. விடியல் எங்கே? அண்ணாமலை!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2024, 8:17 pm

இது கூடத் தெரியாமல் ஸ்டாலின் CMஆக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு : கேரண்டி தயார்.. விடியல் எங்கே? அண்ணாமலை!

தமிழக அரசுக்கு வரும் வருமானம் எல்லாம் எங்கே செல்கிறது? என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: இத்தனை ஆண்டுகளாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்கள் அனைத்திற்கும் குடும்ப ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்து கொண்டிருந்த ஸ்டாலின், மூன்று ஆண்டு காலமாக, திமுக ஆட்சி வெற்று விளம்பரத்தில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மை, தற்போது மக்களுக்குத் தெரிய வந்ததும், பதட்டத்தில் மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்.

தமிழக அமைச்சர்கள் குடும்பங்கள் மட்டும் பணத்தில் கொழிக்கிறார்களே, எப்படி? தமிழக அரசுக்கு வரும் வருமானம் எல்லாம் எங்கே செல்கிறது?. பிரதமர் மோடி உறுதியளித்த, பத்து லட்சம் மத்திய அரசு வேலை வாய்ப்புகள் கடந்த 18 மாதங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது என்பது கூடத் தெரியாமல், ஸ்டாலின் இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு.

கடந்த 2021 தேர்தலின்போது திமுக வாக்குறுதியளித்த மூன்றரை லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் என்ன ஆனது என்பதை முதல்வர் மக்களுக்குச் சொல்லத் தயாரா? மதுரை எய்ம்ஸ் 2026ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வருவது உறுதி என்பது மக்களுக்குத் தெரியும். அது மோடியின் கேரண்டி. ஆனால், நீங்கள் தருவதாகச் சொன்ன விடியல் எப்போது வரும் என்பதே மக்களின் கேள்வி என அண்ணாமலை கூறியுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!