ஆதரவற்றோர் காப்பகங்களில் பணியாற்றுபவர்களுக்கு ரூ.20 லட்சம் வழங்கிய ஐடிசி நிறுவனம் : மாவட்ட ஆட்சியர் நன்றி!!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2021, 1:09 pm
Cbe ITC - Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையத்தில் காப்பகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு ஆண்டுக்குத் தேவைப்படும் ஊதியம் ரூபாய் 20 லட்சத்தை ஐ.டி.சி நிறுவனம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி கிராமத்தில் ஐடிசி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த நிறுவனம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், மேட்டுப்பாளையத்தில் இயங்கிவரும் ஆதரவற்றோர் மனநலம் குன்றியவர்களுக்கான காப்பகங்களில் பணியாற்றும் பராமரிப்பாளர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு இந்த நிறுவனம் ஒரு ஆண்டுக்கு தேவையான ஊதியத்தை மொத்தமாக வழங்கியுள்ளது.

அதன்படி, ரூ. 20 லட்சத்திற்கான காசோலையை நன்கொடையாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று ஐ.டி.சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வெங்கட்ராவ், மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர் விஜயகுமார், நிதி துறை தலைவர் சலீம் ஆகியோர் வழங்கினர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சமீரன் பயனாளிகள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Views: - 151

0

0