ரொம்ப கொடுமை… விஏஓ அலுவலகத்துக்கு தீ வைத்த மர்மநபர் : பொங்கல் வேஷ்டி சேலைகள் எரிந்து நாசம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2023, 6:33 pm

ரொம்ப கொடுமை… விஏஓ அலுவலகத்துக்கு தீ வைத்த மர்மநபர் : பொங்கல் வேஷ்டி சேலைகள் எரிந்து நாசம்!!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா கோட்டையூரில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது. இங்கு காலை திடீரென தீப்பற்றியுள்ளது.
இதையறிந்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனே தீயை அணைக்க முயற்சித்தனர்.

தீ பரவியதையடுத்து பூட்டை உடைத்து உள்ளே சென்று மேலும் பரவாமல் தண்ணீரைக் கொண்டு அனைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் முருகவேல் உள்ளே இருந்த பொருட்களை சென்று பார்த்த போது அங்கே முதியோர் உதவித் தொகை பெறும் பயனாளிகளுக்கான வேஷ்டி, சேலைகள் எரிந்து நாசமானது தெரிய வந்தது.

இது குறித்து நத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?