ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியானது: சென்னை மண்டலம் சாதனை

Author: Aarthi
5 October 2020, 5:08 pm
chennai IIT - updatenews360
Quick Share

நாடு முழுவதும் நடைபெற்ற ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு எழுதிய 1,50,838 மாணவர்களில் 43,204 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. 2 கட்டங்களாக முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், தேர்வு செய்யப்படும் மாணவர்களே இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க முடியும்.

அந்தவகையில், கடந்த மாதம் நடைபெற்ற ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அட்வான்ஸ்டு தேர்வை மொத்தம் 1,50,838 எழுதிய நிலையில், 43,204 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொது தரவரிசை பட்டியலில் ஐஐடி பாம்பே மண்டலத்தின் சிராக் பாலர் முதலிடம் பெற்றுள்ளார். அவர் 396 மதிப்பெண்களுக்கு 352 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

தேர்ச்சி பெற்ற முதல் 22 தேர்வர்களில் சென்னை மண்டலத்தில் இருந்து மட்டும் 5 பேர் இடம்பெற்றுள்ளனர். பொது பிரிவில் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த கங்குலா புவன் ரெட்டி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். சென்னை மண்டலத்தில் தேர்ச்சி பெற்ற பெண்களில் கோத்தபள்ளி நமிதா முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் அகில இந்திய தரவரிசையில் 44வது இடத்தை பிடித்துள்ளார்.

அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களில் முதல் 500 பேரில் சென்னை மணண்டலத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். முதல் 100 பேரில் 28 பேரும், முதல் 500 பேரில் 140 பேரும் சென்னை மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 66

0

0